ஈரான் நாட்டில் இன்று அடுத்தடுத்து இரட்டை வெடிகுண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் உள்ள இஸ்லாமிய குடியரசு நாடு ஈரான். இந்த நாட்டின் உச்ச தலைவராக அலி கமேனியும், ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசியும் உள்ளனர்.
இந்த நிலையில், ஈரான் நாட்டில் இன்று அடுத்தடுத்து இரட்டை வெடிகுண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டில் உள்ள கெர்மான் பகுதியில் உள்ள ஈரான் முன்னாள் தளபதி சுலைமானின் நினைவு நாளில், அவர் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டின்போது ஜப்பானில் நில நடுக்ககம் ஏற்பட்ட நிலையில், இன்று ஈரானில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.