Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்ப்னா பயந்துடுவோமா? கடிதத்தை குப்பையில் போட்ட துருக்கி அதிபர்? – கடுப்பான அமெரிக்கா

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (19:22 IST)
சிரியா போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பையில் போட்டதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் போரை நிறுத்தும் விதமாக அமெரிக்க படைகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக ட்ரம்ப் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகும் துருக்கி அரசு குர்து போராளிகளையும், பொதுமக்களையும் கொன்று குவித்து வருகிறது. துருக்கி அரசின் இந்த செயலுக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் துருக்கி இதை தொடர்ந்தால் அவர்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்தார். ஆனாலும் துருக்கி அதிபர் எர்டோகன் இதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. இந்நிலையில் துருக்கி அரசுக்கு கடிதம் அனுப்பிய ட்ரம்ப் “ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு நீங்கள் பொறுப்பாக வேண்டாம். துருக்கி பொருளாதாரத்தால் அழிய நானும் பொறுப்பாக விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் மனித தன்மையுடனும், நேர்மையாகவும் செயல்படுவீர்கள் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

ஆனால் இந்த கடிதத்தை துருக்கி அதிபர் எர்டோகன் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் துருக்கி மீது பொருளாதார தடைகளை விதிக்க எர்டோகனே வழிவகுத்து கொடுக்கிறார் என பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments