கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணமாக இணைக்க வேண்டும் என்று அதிபராக பொறுப்பேற்க இருக்க இருக்கும் டிரம்ப் வேண்டுகோள் விடுத்த நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் தெரிவித்தார்.
அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விரைவில் பதவி ஏற்க இருக்கும் நிலையில், அமெரிக்காவின் இராணுவம், வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை மேற்கோள் காட்டி கனடாவை அமெரிக்காவின் இன்னொரு மாகாணமாக மாற்றுவதற்கு கோரிக்கை விடுத்தார். இதனால் பொருளாதார பலத்தை பெறலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஏற்கனவே சட்டவிரத போதை பொருள் பழக்கம், சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கனடா தடுக்க தவறினால், அந்நாட்டிற்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்த நிலையில், சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின், டிரம்பின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதற்கு அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்காவுடன் கனடாவை இணைக்க வாய்ப்பே இல்லை என்றும், அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டிரம்ப் பேச்சு முழுமையான புரிதல் இல்லாததாக உள்ளது என்றும், கனடாவின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது, நாங்கள் ஒருபோதும் பின் வாங்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.