Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே! சீமான் பாணியில் பிரச்சாரம் செய்யும் டிரம்ப்!

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (08:24 IST)
தமிழ்நாட்டை ஒரு தமிழரே ஆளவேண்டும், தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும்,. தமிழ்நாட்டில் மற்ற மாநிலத்தவர்கள் வாழ தகுதியுண்டு ஆனால் ஆள தகுதியில்லை என்று சீமான் கடந்த சில ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவருடைய கொள்கை உயர்ந்ததாக இருந்தாலும், அவர் மீது நம்பகத்தன்மை இன்னும் மக்களுக்கு ஏற்படாததால் அவரது கட்சி இன்னும் டெபாசிட் வாங்கவே போராடி வருகின்றது
 
இந்த நிலையில் சீமான் பாணியில் அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கு மட்டுமே உரியது என்றும் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை மற்ற நாட்டினர் பறித்து கொள்வதை தடுப்பேன் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்
 
அமெரிக்காவில் வரும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ள டிரம்ப் இப்போதே தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். பிரச்சாரத்தில் அவர் எடுத்து கொண்ட முக்கிய பிரச்சனை, அமெரிக்காவின் பெரும்பாலான வேலைவாய்ப்பை இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் பறித்து கொள்வதாகவும், அதனை தடுக்க தன்னுடைய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த நடவடிக்கை தொடர மீண்டும் தான் அதிபராவது அவசியம் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு டிரம்ப் ஆட்சி அதிருப்தியை அளித்திருந்தாலும் அவருடைய இந்த கொள்கை அமெரிக்கர்களை கவர்ந்து வருவதால் மீண்டும் அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments