Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தண்ணீரை வைத்து விளம்பரம் தேடும் சீமான் தம்பிகள்! இது ஓவர் அலப்பரையால இருக்கு...

Advertiesment
தண்ணீரை வைத்து விளம்பரம் தேடும் சீமான் தம்பிகள்! இது ஓவர் அலப்பரையால இருக்கு...
, புதன், 19 ஜூன் 2019 (08:55 IST)
திருமுல்லைவாயல் பகுதியில் எந்த பிரச்சனையும் இன்றி தண்ணீர் வரும் நிலையில் நான் தமிழர் கட்சினர் அசுத்தமான தண்ணீரை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில் மக்கள் தண்ணீருக்காக திண்டாடி வருகின்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தண்ணீரை வைத்து சுய விளம்பரம் செய்து வருகின்றனர் என குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. 
 
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் தண்ணீருக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சுய விளம்பரத்திற்காக தண்ணீரை அரசியலாக்கி ஏரியில் இருந்து அசுத்தமான நீரை உறிஞ்சி மக்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
webdunia
2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வரும் இந்த பகுதிக்கு எதற்காக தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க வேண்டும், தண்ணீர் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று கொடுக்கலாமே என கேட்ட அந்த பகுதி கவுன்சிலர் மீதும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிவிட்டுள்ளனராம். 
 
நா தமிழ்ர் கட்சியினர் பல நன்மைகளையும் சமூக சேவைகளையும் செய்து வரும் நிலையில் அங்காங்கே இவ்வாறு சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்வது அக்கட்சினர் மீது அதிப்தியை ஏற்படுத்திவிடுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தண்ணீர்ப்பஞ்சம் எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்தி – அமைச்சரின் பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி !