Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை போய் மீடியாக்கிட்ட சொல்ல சொன்னேன்! – சைடு கேப்பில் திட்டிய ட்ரம்ப்!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (12:35 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா தடுப்பு குறித்து பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ட்ரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடக்க உள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் அமெரிக்க மாகாணங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வாறாக நெவேடா மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் “உலகிலேயே கொரோனா பரிசோதானைகள் அதிகம் செய்த நாடு அமெரிக்காதான். இதுவரை 4 கோடியே 40 லட்சம் மாதிரிகளை பரிசோதனை செய்துள்ளோம். 150 கோடி மக்கள் வாழும் இந்தியாவே கொரோனா பரிசோதனையில் அமெரிக்காவுக்கு அடுத்ததாகதான் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் “கொரோனா செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசிய போது அவர்கூட நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று என்னை பாராட்டினார். அதற்கு நான், இதை போய் இந்த நேர்மையற்ற ஊடகங்களிடம் சொல்லுங்கள் என கூறினேன்” என்று பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தன்னை புகழ்ந்ததாக கூறிய ட்ரம்ப் அதே போக்கில் அமெரிக்க ஊடகங்கள் தன்னை தொடர்ந்து விமர்சிப்பது குறித்தும் காட்டமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments