Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்..? அமெரிக்க மக்களை எச்சரிக்கும் டிரம்ப்..!

Mahendran
திங்கள், 18 மார்ச் 2024 (15:39 IST)
என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என அமெரிக்க மக்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடும். தற்போதைய அதிபர் ஜோபைடன் மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மெக்ஸிகோ கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது
 
இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட படாவிட்டால் ஒட்டுமொத்த நாட்டின் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும், வன்முறை அதிகரிக்கும், இதனால் மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் 
 
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments