Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு..பரிந்துரையை வாபஸ் பெற்ற மெரெஷ்கோ..!

Siva
வியாழன், 26 ஜூன் 2025 (07:54 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதி பட்டி கார்ட்டர் பரிந்துரை செய்தார். ஈரான்-இஸ்ரேல் போரை அவர் புத்திசாலித்தனமாக நிறுத்தியதால் இந்தப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் கார்ட்டர் தனது பரிந்துரைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதேபோன்ற ஒரு பரிந்துரையை உக்ரைன் நாடாளுமன்ற வெளியுறவுக் குழு உறுப்பினர் மெரெஷ்கோ என்பவரும் செய்திருந்தார். ஆனால், தற்போது அவர் தனது பரிந்துரையை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை நிறுத்தும் அளவுக்கு ட்ரம்புக்கு திறமை இல்லை என்று கூறி, தனது நோபல் பரிசுக்கான பரிந்துரையை மெரெஷ்கோ வாபஸ் பெற்றுள்ளார். மெரெஷ்கோ கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்க அதிபராக பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்துவதாக ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதியளித்தார். ஆனால், அவரால் இந்த போரை நிறுத்த முடியவில்லை. மேலும், அவர் தனது பணியை தட்டிக் கழிக்கிறார் என்று மெரெஷ்கோ வெளிப்படையாக கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே, பாகிஸ்தானை சேர்ந்த ராணுவத் தளபதி ஆசிப் முனீர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments