Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிரோஷிமா, நாகசாகி போல் ஒரு தாக்குதல்: ஈரான் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு..!

Siva
வியாழன், 26 ஜூன் 2025 (07:45 IST)
ஈரான் - இஸ்ரேல் போரை நான் தான் நிறுத்தியதாக கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது அந்த போர் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற ஒரு தாக்குதல் என ஒப்பிட்டு பேசியிருப்பது உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நெதர்லாந்தில் நடந்த நேட்டோ மாநாட்டில் பேசிய ட்ரம்ப், "ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்களை நான் உதாரணமாக காட்ட விரும்பவில்லை. ஆனால், அடிப்படையில் அதுபோன்ற ஒரு தாக்குதலால்தான் இந்தப் போர் முடிவுக்கு வந்தது. பி-2 குண்டுவீச்சுதான் இந்த போரை முடிவுக்கு கொண்டுவந்தது. நாங்கள் மட்டும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்காமல் இருந்திருந்தால், அவர்கள் இருவரும் இன்னும் சண்டையிட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்," என்று தெரிவித்தார்.
 
ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என பலமுறை கூறிவிட்டு பின்னர் பின்வாங்கிய ட்ரம்ப், தற்போது ஈரான் - இஸ்ரேல் போரை தான் தான் நிறுத்தினேன் என்றும், ஈரானின் அணுசக்தி தளங்களை அழித்துவிட்டேன் என்றும் கூறி வருகிறார்.
 
ஆனால், அமெரிக்காவின் முன்னணி ஊடகங்களோ, ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அளிக்கப்படவில்லை என்றும், ஒரு சிறிய அளவே அழிக்கப்பட்டிருக்கிறது என்றும், எனவே இதனை ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்கு ஒப்பிட முடியாது என்றும் கூறி வருகின்றன. இந்தச் செய்திகளையெல்லாம் "போலியான செய்திகள்" என்று ட்ரம்ப் பதிலடி கொடுத்து வருகிறார். 
 
இருப்பினும், உலக நாடுகள் ட்ரம்ப்பின் ஈரான் மீதான தாக்குதல் குறித்த கூற்றுகளை பெரிய அளவில் நம்பவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

100 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!

பிற மதத்தவர் எஸ்.சி. சான்றிதழ் பெற்றிருந்தால் ரத்து செய்யப்படும்: மகாராஷ்டிரா முதல்வர்..!

அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

எங்களோட அந்த மாடல் Bike-ஐ ஓட்டாதீங்க? பைக்குகளை அவசரமாக திரும்ப பெறும் Kawasaki! - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments