Publish Date: Wed, 11 Dec 2024 (10:03 IST)
Updated Date: Wed, 11 Dec 2024 (10:05 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்று போலவே என்றும் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி வர்த்தகம் ஆகி வருவதாக தகவல் நிலையாய் உள்ளன.
நேற்று பங்குச்சந்தை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் ஒரே ஒரு புள்ளி மட்டுமே உயர்ந்திருந்த நிலையில், இன்று பங்குச்சந்தை தொடங்கியதிலிருந்து மந்தமாகவே வர்த்தகம் ஆகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை நிஃப்டி வெறும் 18 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 81,504 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி வெறும் 16 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 24 ஆயிரத்து 626 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் இந்துஸ்தான் லீவர், இன்போசிஸ், ஐடிசி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டிசிஎஸ், டைட்டான் உள்ளிட்ட பங்குகள் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசி வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.