விண்வெளி ராணுவத்துக்கு கொடி ரெடி! – அடுத்த கட்ட மும்முரத்தில் ட்ரம்ப்!

Webdunia
சனி, 16 மே 2020 (08:38 IST)
உலகமே கொரோனா பீதியில் தடுமாறி கொண்டிருக்கும் நிலையில் விண்வெளி ராணுவத்திற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார் அதிபர் ட்ரம்ப்.

இதுவரை உலக நாடுகள் பலவற்றிலும் காலாட் படை, விமான படை, கப்பல் படை ஆகியவையே இருந்து வருகின்றன. முக்கியமாக கப்பல்படை கடல்வளம் கொண்ட நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கென பிரத்யேகமாக விண்வெளி படை ஒன்றை அமைக்க போவதாக அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.

சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல நாடுகள் தங்கள் வான்வெளி ஆராய்ச்சிகளை ஒதுக்கிவிட்டு மருந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றன. அமெரிக்காவில் உலகிலேயே அதிகமான கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் பதிவாகியுள்ளது. ஆனால் அதற்கெல்லாம் சீனா மீது பழி போட்ட ட்ரம்ப் தற்போது இந்த விண்வெளி இராணுவம் மீது ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் விண்வெளி ராணுவத்திற்கான அதிகாரப்பூர்வ முத்திரை மற்றும் கொடியையும் ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். ட்ரம்பின் இந்த செயல்பாடு பலரை எரிச்சலூட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments