இந்தியாவிற்கு 1 பில்லியன் டாலர்கள் நிதியுதவி: உலக வங்கி ஒப்புதல்!

வெள்ளி, 15 மே 2020 (12:52 IST)
இந்தியாவில் பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய உதவியாக 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கி பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கான திட்டங்கள், சலுகைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளை சரிசெய்ய உலக வங்கி 1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரத்து 540 கோடி) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசு 20 லட்சம் கோடி அறிவித்துள்ள நிலையில் இந்த நிதி கூடுதல் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மோடி செஞ்ச காரியத்தை பார்த்து வியந்த நாடுகள்! – ஐ.நா பாராட்டு!