காஸா உடனான போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: இன்னொரு போரை நிறுத்தினாரா டிரம்ப்?

Siva
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (09:59 IST)
காசா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
 
காசாவுடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2023-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் சுமார் 65,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
மேலும், இஸ்ரேல்-காசா இடையே பல கட்டங்களாக போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, ஹமாஸ் அமைப்பினரும் போரை நிறுத்த ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த போர் அநேகமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் உள்பட பல போர்களை நான்தான் நிறுத்தினேன் என ட்ரம்ப் கூறிவரும் நிலையில், இந்த போரையும் அவர் நிறுத்திய பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments