சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராக வெற்றி பெற்றதாகவும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதிபர் டிரம்ப் டிரம்ப் இந்த முடிவை ஏற்க மறுத்து, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி நீதிமன்றம் செல்லுவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, டிரம்ப்பின் செயல்கள்தான் அமெரிக்க வரலாற்றில அவர் ஒரு பொறுப்பற்ற அதிபராக இருப்பதற்கான உதாரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும் டிரம்பின் இதுபோன்ற பொறுப்பற்ற தன்மைக்கு அமெரிக்க மக்களே நேரடி சாட்சியாக உள்ளனர். அவரது நோக்கம் என்னவென்பது தெரியவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.