அதானி மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் வழக்கு தடைபடுமா? டிரம்ப் முக்கிய அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (16:59 IST)
வெளிநாடுகளில் நடக்கும் லஞ்சம் முறைகேடுகளை தடுக்கும் சட்டத்தின் அமலாக்கத்தை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, தொழிலதிபர் அதானி உள்பட வெளிநாட்டு தொழிலதிபர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டில் லஞ்சம் முறைகேடுகளை தடுக்கும் இந்த சட்டத்தின் மூலம், அமெரிக்க நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கும் நிறுவனங்கள் மீது ஊழல் விவகாரங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அதானி அமெரிக்க நிறுவனங்களிடம் நிதி பெற்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் சமீபத்தில் அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இந்த சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக, அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெறும் அதானி வழக்கு தடைபடும் அல்லது ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருத்துக்கணிப்புகள் மக்கள் தீர்ப்பு அல்ல.. கோடி மீடியாவின் பிரச்சாரம்: தேஜஸ்வி

அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி.. விஜய்யின் காட்டமான பதிவு..!

காவல்துறை வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.. சிவகெங்கையில் பயங்கர விபத்து..!

தமிழகத்தில் முழு நேர டிஜிபி கூட இல்லை.. குற்றவாளிகளுக்கு எப்படி பயம் வரும்: அதிமுக

போலீஸ் வாகனம் மோதி 3 பேர் பலி!.. சிவகங்கையில் சோகம்!....

அடுத்த கட்டுரையில்
Show comments