Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா மாறினால் ஒரு பைசா செலவில்லை.. டிரம்ப் கூறிய ஆலோசனை..!

Siva
புதன், 28 மே 2025 (07:49 IST)
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கூறுகையில், அமெரிக்காவின் 'கோல்டன் டோம்' பாதுகாப்பு அமைப்பை பெற, கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறும் சாத்தியத்தை பரிசீலித்து வருகிறது என தெரிவித்தார்.
 
தன் சமூக வலைத்தள பக்கத்தில் ட்ரம்ப் கூறியதாவது: "கனடாவிடம் நான் தெரிவித்தேன்,  அமெரிக்காவின் பிரமாண்டமான கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் சேர விரும்புகிறீர்கள் என்றால் என்னிடம் சொல்லலாம்.  தனிப்பட்ட நாடாகவே தொடர்ந்தால் 61 பில்லியன் டாலர் செலவாகும். ஆனால் 51வது மாநிலமாக மாறினால், எந்தச் செலவும் வேண்டியதில்லை. அவர்கள் இதை பரிசீலிக்கிறார்கள்!" என்றார்.
 
2024ல் இருந்து ட்ரம்ப் கனடாவை "சாத்தியமான 51வது மாநிலம் என குறிப்பிட்டு வருகிறார். மே 3ஆம் தேதி கனடா பிரதமர் மார்க் கார்னி வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, ட்ரம்ப் மீண்டும் இந்த ஆலோசனையை அவர் கூறினார்.   
 
 ட்ரம்ப் கூறிய கோல்டன் டோம் என்பது மிகப்பெரிய பன்முக ஏவுகணை பாதுகாப்பு திட்டம்.இது  2029க்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் ‘Iron Dome’-ஐவிட வேறுபட்டது. இது தொலைதூர, ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தடுத்து, அமெரிக்காவையே முழுவதுமாக பாதுகாக்கும். விண்வெளி அடிப்படையிலான 
இயந்திரங்கள் மூலம் ஏவுகணைகளை பறக்கும் போதே அழிக்கும்  திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments