கனடாவில் இந்திய மாணவி ஒருவர், பேருந்துக்காக காத்திருந்தபோது மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள ஒண்டோரியா அருகே உள்ள ஹாமில்டன் பகுதியில் அமைந்துள்ள கல்லூரியில், இந்தியாவை சேர்ந்த 21 வயது மாணவி படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, அவர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த நிலையில், அங்கு கருப்பு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சரமாரியாக இந்திய மாணவி மிது துப்பாக்கி சூடு நடத்தி தப்பித்து சென்றனர்.
அந்த மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கொலைக்காரர்களை கண்டுபிடிக்க, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார், விசாரணையை தீவிரமாக செய்து வருகின்றனர். இந்திய மாணவியை திட்டமிட்டு கொலை செய்தார்களா? அல்லது வேறு யாரையாவது கொலை செய்வதற்காக வந்தவர் தவறுதலாக இந்த மாணவியை கொலை செய்தார்களா? என்பதைக் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த மாணவி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கனடாவில் உள்ள இந்திய தூதரகம், மாணவியின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.