இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. செஞ்சுரி அடிக்க போகும் டிரம்ப்..

Mahendran
சனி, 22 நவம்பர் 2025 (13:08 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் ஏற்படுவதை தான் தடுத்து நிறுத்தியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே 60 முறைக்கு மேல் கூறிய அவர் விரைவில் செஞ்சுரி அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸோரான் மம்தானியை நேற்று வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது, "இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தியதாக குறிப்பிட்ட டிரம்ப், தான் பல்வேறு நாடுகளுக்கு இடையில் எட்டு அமைதி ஒப்பந்தங்களை கொண்டு வந்ததாகவும் கூறினார்.
 
முன்னதாக, நவம்பர் 19 அன்று பேசிய டிரம்ப், மோதல்கள் தொடர்ந்தால் இருநாடுகள் மீதும் 350% வரி விதிக்கப்படும் என்று எச்சரித்ததாகவும், அதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அழைப்பு விடுத்து போருக்குச் செல்ல மாட்டோம் என்று உறுதியளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
 
டிரம்ப் 60 முறைக்கும் மேலாக போரை நிறுத்தியுள்ளதாக கூறி வரும் நிலையில், இந்த போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு இல்லை என்று மத்திய அரசு ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments