Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிபந்தனைகள் கூடிய சந்திப்பு: கிம் சம்மதம்!

நிபந்தனைகள் கூடிய சந்திப்பு: கிம் சம்மதம்!
, செவ்வாய், 6 மார்ச் 2018 (20:53 IST)
வடகொரிய அதிபர் கிம் சில நிபந்தனைகளுடன் டிரம்ப்பை சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இவர்களது சந்திப்பில் தென்கொரியாவின் பங்கு அதிக அளவு உள்ளது. 
 
எதிர்ப்புகளை மீறி வடகொரிய அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால், வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஏவுகணை சோதனைகள் ஏதும் வடகொரியா நடத்தவில்லை.
 
கடந்த மாதம் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சுமூக நிலைக்கு வந்தது வடகொரியா. இந்நிலையில் வடகொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரிய அரசு சில பிரதிநிதிகளை அனுப்பி வைத்தது. 
 
இதன் பின்னர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கிம் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒதுக்க அமெரிக்கா கோரிக்கை விடக்கூடாது என அவர் நிபந்தனைகளுடன் தனது சந்திப்பிற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிடிஎஸ் வரியில் ரூ.3,200 கோடி ஊழல்: ஊழியர்களின் உழைப்பில் அடிக்கும் நிறுவனங்கள்...