Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செஞ்ச வேலைக்கு....டிக் டாக் ஆப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா.. 40 கோடி அபாராதம்....

செஞ்ச வேலைக்கு....டிக் டாக் ஆப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா.. 40 கோடி அபாராதம்....
, வெள்ளி, 1 மார்ச் 2019 (16:15 IST)
இளைஞர்களை வெகுவாக கவர்ந்த டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவின்  தலைமை வர்த்தக ஆணையம் ரூ.40 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சிறுவர்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் திரட்டியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 
வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டருக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் செயலி என்றால் டிக்டாக் செயலி தான். இந்த செயலியை வயது வித்தியாசம் இன்றி எல்லாருமே பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் மற்றும்   பெண்கள் மத்தியில அதிக அளவில் டிக் டாக் மோகம் காணப்படுகிறது. ஒரு பாடலையோ, இசையையோ அல்லது வசனத்தையே பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்றாற் போல் வாயை அசைப்பது மற்றும நடிப்பது போன்றவை இந்த செயலில் செய்யப்படுகிறது.
 
இதற்கு இளசுகள் பலரும் அடிமையாகி வருகிறார்கள். இதில் ஆபாசமான வீடியோக்களும் பரப்ப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் இந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து டிக் டாக் செயலிக்கு தடைவிதிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் மணிகண்டன் கூறியிருந்தார். 
 
இந்த நிலையில், டிக்டாக் செயலி குழந்தைகளின் தகவல்களை திரட்டி அமெரிக்காவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பெற்றோர்களின் அனுமதி இன்றி டிக்டாக் செயலி 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின்  தகவல்களை பெற்றோருக்கு தெரியாமல் திரட்டியதாக புகார் எழுந்தது.
 
இதையடுத்து அமெரிக்காவின்  தலைமை வர்த்தக ஆணையம் விதிகளை மீறி செயல்பட்டதாக டிக் டாக் செயலிக்கு சுமார் ரூ.40 கோடி அபராதம் விதித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பன்னி கிட்ட எங்க கடிவாங்கனும் விவஸ்த இல்ல? வைரலாகும் மாடலின் வீடியோ