Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரேக் பிடிக்காததால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த டிரக் - 11 பேர் பலி

Advertiesment
பிரேக் பிடிக்காததால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த டிரக் - 11 பேர் பலி
, திங்கள், 21 மே 2018 (10:56 IST)
இந்தோனேசியாவில் டிரக் ஒன்று குடியிருப்புப் பகுதியில் புகுந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியா ப்ரிபெஸ் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில், டிரக் ஒன்று சர்க்கரை லோடு ஏற்றிக்கொண்டு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. மலைப்பகுதி என்பதால் டிரக்கின் டிரைவர், வாகனத்தை மெதுவாக ஓட்டினார்.
 
இந்நிலையில் மலையின் வளைவில் டிரக் சென்றுகொண்டிருந்த போது, டிரக்கின் பிரேக் பிடிக்காமல் போனது. இதில் டிரக் அருகிலிருந்த குடியிருப்பு பகுதியில் புகுந்தது.
webdunia
இதனை சற்றும் எதிர்பாராத குடியிருப்பு வாசிகள் அலறியடித்து ஓடினர். இருந்தபோதிலும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக 11 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 13 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 வீடுகள்  சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி ; காங்கிரஸ் - மஜத கூட்டணியில் புகைச்சல்?