இன்றைய உலகில் பல மக்கள் செல்ஃபிக்களுக்கு அடிமைகளாகவும், தங்களின் புகைப் படங்கள் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளிவர பல்வேறி முயற்சிகளில் இறங்குகின்றனர். இந்நிலையில் நைஜீரிய நாட்டு இளைஞர் ஒருவர் பறக்க இருந்த விமானத்தின் இஞ்ஜினில் ஏறி விநோதமான சாகசம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜுலை 19 ஆம் தேது அன்று முர்டலா முகமது ஏர்போர்டில் இருந்து, ஆஸ்மாம் விமானம் ஒன்று பறக்க தயாராக இருந்தது. அப்பொழுது ஒரு இளைஞர் விமானத்தின் ஒரு பக்க இறக்கையில் கீழே உள்ள, எஞ்ஜினைப் பிடித்த படியே தொங்கிக்க்கொண்டிருந்தார். இதை விமானத்தில் உள்ளிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.இது வரைலாகிவருகிறது.
பின்னர் அந்த இளைஞர் மெதுவாக இன்ஜின் மேலிருந்து கீழிறங்கினார். காவலாளிகளாலும் அந்த இலைஞரை அடையாளம் காணமுடியவில்லை. அதனால் பயணிகள் முகவும் பீதியடைந்தனர். இந்த சம்பவத்தால் விமானம் புறப்பட 30 நிமிடங்கள் தாமதமானது. இந்த சம்பவம் அந்நாட்டில் டெய்லி போஸ்ட் நைஜீரியாவிலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.