Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உரிமையாளரின் சவப்பெட்டியிலிருந்து நகர மறுத்த நாய் : வைரலாகும் வீடியோ

Advertiesment
dog
, சனி, 20 ஜூலை 2019 (16:47 IST)
பெரு நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இடமான லீமாவில் ஒரு நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்த உரிமையாளர் இறந்துவிட்டார். இதனையடுத்து மறுநாள் அவரது உடல் உறவினர்களின் அஞ்சலிக்காக ஒரு கண்ணாடிப் பேழை போன்ற சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தினமும் விளையாடிய நபர், உணவிட்ட நபர் இன்று அசைவற்று உள்ளதைப் பார்த்த நாய், பரிதாபத்துடன் அந்த கண்ணாடிப்பேழையிலேயே தன் முன்னங் கால்களை அப்பெட்டியின் மீது வைத்து அமர்ந்து இருந்து. அதை அப்புறப்படுத்த சிலர் மூயன்றனர்... ஆனால் அது அங்கிருந்து செல்ல மறுத்து பாசப்போராட்டம் நடத்தியதை எல்லோரையும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
 
இந்தக் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட தற்போது, இது வைரலாகிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் காலமானார் ! கங்கிரஸார் அதிர்ச்சி