இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நடக்க உள்ள இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் பற்றி பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை அதிகமாக எதிர்பார்க்கிறேன். அந்த போட்டியை காண முதல் ஆளாக மைதானத்துக்கு சென்று நிற்பேன். அதற்கு முன்பாக சோஷியல் மீடியாவில் வார்த்தைப் போரே நடந்து வருகிறது. இது சம்மந்தமாக என்னுடைய நண்பர் சோயிப் அக்தருடன் விவாதம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் செமி பைனலுக்கு எந்த நான்கு அணிகள் தகுதி பெறும் என்பது குறித்த கேள்விக்கு “இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள்தான் தகுதிபெறும்” என நம்பிக்கையோடு அறிவித்துள்ளார்.