Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசான் காடுகளை பாதுகாக்க.... ’ பிரபல நடிகர் ’ 50 மில்லியன் டாலர்' நன்கொடை

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (17:54 IST)
அமேசான் காட்டில்  வாழும் அரியவகை உயிரினங்கள், பறவைகள், பூச்சியினங்கள் எல்லாம் காட்டுத்தீயில் அழிந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரிரோ, 5 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளார்.
உலகில் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகள் உலகின் மக்களுக்காக 20% ஆக்சிஜனை வழங்கிவருகிறது. ஆனால் சமீபத்தில் அங்கு தீ பிடித்தது. இந்நிலையில் அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ஆயுதப் படைகளை அனுப்ப பிரேசில் அதிபர் போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார். அங்குள்ள இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகள் ஆகிய இடங்களுக்கு படையினர் அனுப்பப்படுவர் என்று தெரிவித்தார்.
 
அமேசான் தீ கட்டுப்படுத்தப்படும் வரை பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமலாக்கப் போவதில்லை என்று பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் கூறியுள்ளன.
 
பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை பின்லாந்து கோரியுள்ளது.
காட்டுத் தீயை அணைக்க சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பிரேசிலின் பல்வேறு நகரங்களிலும் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர். இது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  வருகிறது.
 
இந்நிலையில் பொலிவியாவில் உள்ள அமேசான் காட்டில் 8 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியுள்ள காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.இதில் உலகமே கவலை அடையக்கூடிய ஒரு விஷயம் என்றால், காட்டுத் தீயில் எரிந்த பகுதிகள் எல்லாம் மீண்டும் வனச்சோலைகளாக உருவாக குறைந்தது 200 ஆண்டுகள் ஆகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
கடந்த மாதம்  பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ , லாரன் பவல் ஜாப்ஸ், மற்றும் பிரையன் ஷெத் ஆகியோர் இணைந்து எர்த் அலையன்ஸ் என்ற அமைப்பை தொடங்கினர். இந்நிலையில் இந்த அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் வனவிலங்குகளை பாதுகாக்கவும், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி வளங்களை ஆதரிப்பது போன்றவற்றிற்காக அமேசான் வன நிதியம் என்ற பெயரில் நிதி திரட்டி வருகின்றது. 
 
இந்த நிதிகள் அமேசான் காடுகளைப் பாதுக்காக்க தீவிரமாக இயங்கிவரும் உள்ளூர் அமைப்புகளுக்கு வழக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி லியானார்டோ டிகாப்ரியோ 5 மில்லியன் டாலர் நிதியை நன்கொடையாக அளித்து இந்த பணியை தொடக்கி வைத்துள்ளார்.
 
இதுகுறித்து டிகாப்ரியோ தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

நம் வாழும் உலகின் மிகப்பெரிய காடுகளைக் கொண்டுள்ளது அமேசான். இவை இல்லாமல் நம்மால் புவி வெப்பயமாதலை கட்டுப்படுத்த முடியாது. எனவெ இந்த மழைக்காடுகளை பாதுக்காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். 
 
டிகாப்ரியோவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments