Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்ணுக்கு மொட்டையடித்து ஊர்வலம் நடத்திய மக்கள்: அதிர்ச்சி சம்பவம்

Advertiesment
பெண்ணுக்கு மொட்டையடித்து ஊர்வலம் நடத்திய மக்கள்: அதிர்ச்சி சம்பவம்
, திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (17:17 IST)
ஜார்கெண்டில் ஒரு பெண்ணுக்கு மொட்டையடித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கெண்ட் மாநிலம் கோடர்மா மாவட்டத்தில் டெங்கோடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், பல நாட்களாக தனது கணவர் வீட்டில் இல்லாத நேரம், உறவினர் ஒருவருடன் ரகசிய உறவு வைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரிந்தவுடன், அந்த மக்கள் அந்த பெண்ணின் மீது தான் தவறு என குற்றம் சுமத்தி அந்த பெண்ணின் தலையை மொட்டையடித்து ஊர்வலமாக சுற்றி வர வைத்துள்ளனர். இந்த அவுமானப்படுத்துதலில் அவரது கணவரும் உடந்தையாக இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

அதன் பின்பு அந்த பெண்ணை ஊர் மக்கள் பலரும் வீட்டிற்குள் நுழைந்து  தெருவுக்கு நடுவில் இழுத்து வந்து மொட்டையடித்தனர் என காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கிட்டதட்ட 11 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபத்தான மலைச் சாலையில்... இரும்புக் கம்பிமேல் செல்லும் வாகனங்கள்..