Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை திருட்டு-போலீசார் தீவிர விசாரணை!

Advertiesment
Child stolen

J.Durai

, புதன், 31 ஜூலை 2024 (13:38 IST)
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்த சின்னு-கோவிந்தன் தம்பதியருக்கு கடந்த 27ஆம் தேதி  ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
 
அதன் பின் குழந்தை நல வார்டுக்கு மாற்றி இருக்கிறார்கள்
 
இந்த நிலையில் இன்று காலை 9-மணி அளவில் சின்னுவின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது  அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குழந்தையை பார்த்துக் கொள்வதாக கூறி சின்னுவிடம் குழந்தையை வாங்கி நைசாக திருடி சென்று இருக்கிறார்
 
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை அரசு நடத்த முனைப்பு காட்டுவது ஏன்? டிடிவி தினகரன்