Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவிற்குள் மீண்டும் நுழைய டிக்டாக்கின் அசத்தல் திட்டம்

இந்தியாவிற்குள் மீண்டும் நுழைய டிக்டாக்கின் அசத்தல் திட்டம்
, ஞாயிறு, 19 ஜூலை 2020 (20:39 IST)
சமீபத்தில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து சீனாவின் 59 செயலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது அதில் முக்கியமானது டிக்டாக் மற்றும் ஹலோ என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதால் சுமார் 45,000 கோடி நஷ்டம் அடைந்த டிக்டாக் நிறுவனம் அதிரடியாக ஒரு சில முடிவை எடுத்தது. அதன்படி சீனாவிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் ஒரு நாட்டில் டிக்டாக்கின் தலைமை அலுவலகத்தில் நிறுவ முயற்சி செய்தது
 
அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் டிக்டாக் நிறுவனத்தின் தலைமையகம் அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் லண்டனில் அமைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
 
இந்தியாவில் டிக்டாக் தலைமையகம் அமைக்க பலத்த எதிர்ப்பு இருப்பதன் காரணமாக இந்தியாவின் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தலைமையகம் அமைக்க டிக்டாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது
 
சீனா ஊழியர்கள் ஒருவர் கூட இல்லாமல் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க ஒப்புக் கொண்டதால் இந்த இரண்டு நாடுகளில் ஒரு நாட்டின் டிக்டாக் தலைமையகம் விரைவில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் இந்தியாவில் டிக் டாக் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவையில் 3 கோவில்கள் சேதப்படுத்திய சம்பவம்: ஒருவர் கைது