Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 1 முதல் பிறப்பவர்கள் புதிய தலைமுறை.. உருவாகிறது Gen Beta தலைமுறை..!

Siva
திங்கள், 30 டிசம்பர் 2024 (08:51 IST)
நாளை மறுநாள் 2025 புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில் அன்றைய தினம் முதல் பிறக்கும் குழந்தைகள் ஜென் பீட்டா என்னும் புதிய தலைமுறையாக இருப்பார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டு வரை பிறப்பவர்கள் இவ்வாறு அழைக்கப்படுவார்கள்.

1989 முதல் 1996 வரையிலான தலைமுறையை மில்லியனியல் என்றும்,  1996 முதல் 2010 வரையிலான தலைமுறையை ஜெனரல் இசட் என்றும்  2010 - 2024 ஆம் ஆண்டு பிறந்தவர்களை ஜெனரல் ஆல்பா என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிறக்கும் குழந்தைகள் ஜென் பீட்டா என்று கூறப்படும் நிலையில் இந்த தலைமுறையினர் பெரும்பாலும் ஜென் ஆல்பா மற்றும் ஜென் இசட்டுகளின் வாரிசுகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

2035 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் ஜென் பீட்டா தலைமுறையாக இருக்க வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments