Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது உங்களின் உதவித் தொகையல்ல; உரிமைத் தொகை- முதல்வர் மு.க.ஸ்டாலின்

இது உங்களின் உதவித் தொகையல்ல; உரிமைத் தொகை- முதல்வர் மு.க.ஸ்டாலின்
, வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (17:06 IST)
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று திராவிட மாடலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம்  1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் 1000 வழங்கப்படுகிறது.

மாதம் தோறும்  15 ஆம் தேதி  பயனர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ''இனி மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.. கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்கு தரப்படும் அங்கீகாரமே இத்தொகை. இது உங்களின் உதவித் தொகையல்ல.  உரிமைத் தொகை. உங்களில் ஒருவனான நான் வழங்கும் உழைப்புத் தொகை'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலை போன்ற பொய் சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கக்கூடாது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்