Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் கூடுதல் டிக்கெட்கள் விற்பனை...

Advertiesment
Music show Kalarupadi
, புதன், 13 செப்டம்பர் 2023 (18:02 IST)
ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்'  என்ற இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில்,  நிகழ்ச்சியில் அனுமதி பெறப்பட்டதைவிட கூடுதலாக 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக  விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைக் காண 20 ஆயிரம்பேர் கூடுவார்கள் என தெரிவித்து, காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்த நிலையில், கூடுதலாக 21 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 41 டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு  ஏசிடிசி அளித்துள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அதில் தான் அனுமதி பெறப்பட்ட 20 ஆயிரம் பேருக்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதில் 400க்கும் மேற்பட்ட வாலிண்டியர்கள் மற்றும் செக்யூரிட்டிகள் ஈடுபடவுள்ளதாகவும், காவல்துறை முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு அக்கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், மேலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக எந்த தகவலும் இடம்பெறவில்லை.  கார் பார்க்கிங்க் வசதியில்லை...இதனால் குறைவான போக்குவரத்து போலீஸார் மற்றும் போலீஸ் அன்று பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்ததாக கூறப்படுகிறது.

முதல்வரின் கான்வாயும் 20  நிமிடங்களுக்கு மேல் அப்பகுதியில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளத்தில் உலா வரும் 70 பயங்கர முதலைகள்; யாரும் வெளியே வராதீங்க! – ஹாங்காங்கில் பரபரப்பு!