Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்... ஆச்சர்யமூட்டும் தகவல்

Advertiesment
artificial thinking
, திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (19:47 IST)
செயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தானியங்கி முறையில் கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்க கூகுள்,ஆப்பிள் போன்ற நிறுவங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில் செயற்கை அறிவு சிப் மூலம் சைக்கிளை தானியங்கி முறையில் செயல்பட வைத்துள்ளார்கள்.
 
மேலும் இந்த சைக்கிளை யாரும் பிடித்து தள்ளத் தேவையில்லை. அது நாம் நடப்பது போலவே உருண்டுவரும் அதே நேரத்தில் அது பக்கவாட்டில் சாய்வதுமில்லை. வேகத்தடை, மேடு பள்ளம், வாகன முதலாளி மற்றும் மற்ற ஆட்கள் ஆகியோரின் வேறுபாட்டை உணர்ந்து செயப்படும். ஓனரின் வாய்ச்சொல்லை கேட்டும் செயல்படும். செல்போன், கணினியின் மூலமும் இதை இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிளில் உள்ள தொழில் நுட்பம் நியோமார்பிக் சிப் எனப்படும். இண்டெல் நிறுவனத்தில் சிப்களின் தாக்கத்தில் இந்த சிப்பை உருவாக்கியுள்ளார் சீன பொறியாளர் மைக் டேனிஸ். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்ட்டுனிஸ்ட் பாலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்