Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரைனில் போய் சண்டை போட சொல்றாங்க.. காப்பாத்துங்க! - ரஷ்யாவில் இருந்து கதறிய இந்தியர்!

Advertiesment
Indian In Russia war

Prasanth K

, வெள்ளி, 24 அக்டோபர் 2025 (08:24 IST)

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் வலுகட்டயமாக ரஷ்ய ராணுவத்தில் தன்னை இணைத்து போருக்கு அனுப்புவதாக இந்தியர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில் ரஷ்யா பல ராணுவ வீரர்களை இழந்துவிட்ட நிலையில் ரஷ்யாவில் படிக்க மற்றும் வேலைக்காக சென்ற இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டு பிரஜைகளை கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்து போருக்கு அனுப்புவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

 

இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த அகமது என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு ரஷ்யாவில் வேலை வாங்கி தருவதாக முகவர் ஒருவர் அழைத்துச் சென்று ரஷ்ய ராணுவத்தில் மாட்டிவிட்டு விட்டதாக கூறியுள்ள அவர், உக்ரைனுக்கு போருக்கு செல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என ரஷ்ய ராணுவம் மிரட்டுவதாகவும், தன்னை காப்பாற்றும்படியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

அவரை ரஷ்யாவிலிருந்து மீட்க இந்தியா நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற எம்.பி அசாசுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! - இன்றைய மழை வாய்ப்பு!