Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரு நாட்டு உறவில் பாலமாக இருக்கும் யீயீ பாண்டா

Advertiesment
இரு நாட்டு உறவில் பாலமாக இருக்கும் யீயீ பாண்டா
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (13:55 IST)
நம் இந்தியாவில் கேங்ஸ்டார் படம் எடுப்போருக்கு பிரமாண்டமான காட்சிகளை எடுக்க தேவைப்படுவதில் இயக்குநர்களின் விருப்பத்திற்கு உரிய நாடு மலேசியா. அதேபோன்று தற்போது அமெரிக்காவுக்குப் போட்டியாக பொருளாதார வளர்ச்சியில் உருவெடுத்துள்ள நாடு சீனா.  இந்நிலையில் இந்த இருநாடுகளுக்கும் இடையே பாலமாக யீயீ எனும் பாண்டா செய்யல்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியா மற்றும் சீன ஆகிய இரு நாடுகளிடையேயான ஆரோக்கியமான நட்பினை பலப்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் ஒன்று தான் யீயீ எனப்படும் பாண்டாவை இரு நாடுகளிடையே பரிமாறிக்கொள்வது ஆகும்.
 
இந்த ஒப்பந்தத்தின்படி மலேசிய நாட்டிற்கு, சீன தேசசத்திலிருந்து பரிமாறப்படும் பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்து, அந்த பாண்டாக்களுக்கு 2 வயதாகும் போது, அவற்றை மீண்டும் சீன  தேசத்திற்கே அனுப்புவதுதான். இந்நிலையில் மலேசிய நாட்டின் பிறந்த பாண்டா ஒன்றுக்கு பெயர் சூட்டும் விழா கோலாலம்பூரில் நடைபெற்றது. இவ்விழாவில் அந்நாட்டு அமைசர் சேவியர் குமார் கலந்துகொண்டு பேசினார். அதில், சீன மொழியில் யீயீ என்றால் நட்பு எனப்படும். அதனால் பாண்டாவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருநாடுகளிடையே நட்பை பறைசாற்றும் விதமாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுக்காட்டில் பிணமாக வயசு பெண்: யார் என்றே தெரியாமல் போலீசார் திணறல்!