சீனாவில் 5 மாடி கட்டிடம் ஒன்று ஆற்றில் நகர்ந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு,சீனாவில் நீரில் மிதக்கும் உணவு விடுதி ஒன்று சில காரணங்களுக்காக இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதனால் அந்த விடுதியை யாங்ஸே ஆற்றின் மூலம் வேறு இடத்திற்கு இரண்டு படகுகளின் மூலம் இழுத்தச்செல்லப்பட்டன. இதனை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் “ஒரு 5 மாடி கட்டிடம் நீரில் மிதந்து செல்கிறது” என்பது அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்போது அந்த வீடியோ வைரலாகவில்லை.
இந்நிலையில் தற்போது அதனை மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதனை பலரும் பல விதமாக கேப்ஷன் இட்டு பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீஹரி என்றொருவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “கடல் நீர் மட்டம் அதிகமானால், இனி கவலைப்பட தேவையில்லை. இந்த கட்டிடத்தை கட்டியவர் மிகவும் பாராட்டுக்குறியவர்” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதே போல் கௌஷிக் விஷ்வகர்மா, என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒரு வேளை டிராஃபிக் அதிகமாக இருந்தால், நாங்கள் வீட்டையே நகர்த்தி கொண்டு உங்களிடம் வந்து சேர்வோம்” என கேலியாக அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது போல் உலகமெங்கும் 5 மாடி கட்டிடம் ஆற்றில் மிதந்து செல்லும் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.