தமிழ்நாட்டில் அரசே மதுபானக் கடையை திறந்து வைத்துள்ளது. அதனால் தாரளமாக மக்கள் மதுவில் தள்ளாடுகிறார்கள். அரசுக்கும் கல்லா கட்டுகிறது. மதுபான விற்பனை அதிக வருமானம் கொடுக்கிறது. சில நாடுகளில் இதேபோல மதுபான விற்பனை தூள் பறக்கிறது. அதனால் இளைஞர்கள் சிலர் இதற்கு அடிமைகளாகி வருகின்றனர்.
நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டேம் என்ற நகரத்தில் இளைஞர்கள் குரூப் ஒன்று மது அருந்திவிட்டு தொலைக்காட்சியை பார்த்துள்ளனர். அதில் ஒரு நிகழ்ச்சியாக கெழுத்தி மீன் உள்ள தண்ணீரை குடித்து விட்டு, அம்மீனை 4 விநாடியில் வெளியில் துப்பிவிடுகிறார்.
ஆனால் இன்னொரு இளைஞர் அதே மீனைக் கையில் எடுத்து மற்றொருவரை விழுங்கச் சொன்னார். இம்மீனை விழுங்கிய 10 ஆம் நொடியில் வாந்தி எடுத்தார். எவ்வளவோ முயற்சி செய்தும் மீனை எடுக்க முடியவில்லை. மீன் தொடர்ந்து உள்ளே சென்றபடியே இருந்தது. இதனால் இளைஞருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டது. பயந்து போன நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது லாரிங்ஸ்கோப் கருவியை வைத்து பரிசோதிக்கையில் இளைஞரின் தொண்டையில் மீன் இருப்பது தெரியவந்தது.
உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யவே அந்த இளைஞர் உயிர் பிழைத்துக்கொண்டாதாக தகவல் வெளியாகின்றன. மேலும் இனி உயிருடன் இருக்கும் மிஜ்னை உண்ண வேண்டாம் என மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர்.