இத்தாலியாவில் உள்ள அட்ரியாட்டிக் நகரத்தில் தினமும் இரவு நேர இசை நிகழ்ச்சி நடப்பது வாடிக்கை. நேற்று ராப் பாடகர் சிபேரா எபஸ்தாவின் கச்சேரியை காண மக்கள் பலர் ஆர்முடன் காத்திருந்தனர்.
நிகழ்ச்சி தொடங்கி மக்கள் ஆர்வமுடன் ரசித்துக்கொண்டிருந்த வேளை கூட்டத்தில் ஒருவர் பெப்பர் (மிளகாய் ) ஸ்பிரே அடித்துள்ளார். அதனால் மக்கள் மூச்செடுக்க முடியாமல் திணறியிருக்கிறார்கள் . அதன் பின் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வாயிற்கதவை திறந்து வெளியேற முயற்சித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு எனவும் போலீஸார் விசாரணையில் கூறியுள்ளார்கள்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி உள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோருக்கு காயம் ஏற்பட்டு தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.