Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளையராஜாவின் முடிவுக்கு கோரிக்கை வைத்த கச்சேரி கலைஞர்கள் !

இளையராஜாவின் முடிவுக்கு கோரிக்கை வைத்த கச்சேரி கலைஞர்கள் !
, வியாழன், 29 நவம்பர் 2018 (18:40 IST)
இசைஞானி இளையராஜா பாடல்களுக்கு ராயல்டி தொகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை கேள்விப்பட்ட கச்சேரி கலைஞர்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். 
 
இளையராஜா இசையமைத்துள்ள பாடல்களுக்கு ராயல்டி தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் இசை துறையில் பணியாற்றி வரும் கலைஞர்களிடையே மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
திரையிசையில் மிகப்பெரிய ஆளுமையாக திகழும் இசைஞானி இளையராஜா, தனது இசையில் உருவான அதனை பாடல்களுக்கும்  காப்புரிமை கோரினார். மேலும், அவருடைய அனுமதியில்லாமல் பாடகர்கள் வியாபார ரீதியாக பாட முடியாத சூழல் ஏற்பட்டது. 
 
தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், அதற்கான காப்புரிமையை பெற்று திரைப்பட இசைகலைஞர்கள் சங்கத்திடம் ஒப்படைத்தார். இது மேலும் பரபரப்பை கூட்டியது. 
webdunia
அந்த வகையில் எஸ்.பி பாலசுப்ரமணியம் அமெரிக்காவில் நடந்த இசைகச்சேரியில் இளையராஜாவின் பாடலை பாடியதால் இளையராஜா சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது.  அந்த விவகாரம் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் சர்சைகளை ஏற்படுத்தியது.
 
பாடல்களை இசையமைத்ததற்கே காப்புரிமை கோரும் இளையராஜா , அந்த பாடல் வரிகளை எழுதிய லிரிக்கிஸ்ட்களுக்கும் சமபங்கு இருக்கிறது என்பதனை மறந்து விட்டார் போல, 
 
இந்நிலையில் மேடைகளில் வியாபார ரீதியாக இளையராஜாவின் பாடலை பாடுவதற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விவரங்களை இசைக்கலைஞர்கள் சங்கம் தெரிவித்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 
அதன்படி, ஒரு ஆண்டுக்கு வெளிநாட்டு கச்சேரிகளில் பாட, ஏ பிரிவினருக்கு ரூ.20 லட்சம், பி பிரிவினருக்கு ரூ.15 லட்சம், சி பிரிவினருக்கு ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளைகள் நடத்தும் நிகழ்ச்சிகள், கல்யாணம், பிறந்தநாள், கோவில் நிகழ்ச்சிகளில் பயன்படுத்த கட்டணம் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இதனிடையே, பாடல்களை பாட காப்புரிமை கோரும் அறிவிப்பை இசைஞானி இளையராஜா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேடை இசை பாடகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் சும்மா பார்த்தாலே போதுங்க...வில்லன் நடிகர் ஓபன் டாக்