Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவின் ஷென்சென் நகர அதிசய வெற்றிக்கான ரசகசியம்..!

சீனாவின் ஷென்சென் நகர அதிசய வெற்றிக்கான ரசகசியம்..!
, புதன், 14 அக்டோபர் 2020 (23:47 IST)
40 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் தெற்கு பிரதான நகரமான ஷென்சென் அடிப்படை அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய போராடி வந்தது. அப்போது உள்ளூர்வாசிகளுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்காக தனித்துவமான மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது, நான்கு தசாப்தங்களில் அது செய்த மகத்தான சாதனைகள் அளப்பரியது. 
 
இன்று சீர்திருத்தம் மற்றும் திறப்புக் கொள்கையின் அடையாளச் சின்னமாக ஷென்சென் கருதப்படுகிறது. 40 ஆண்டுகளில், சீனாவின் இடைவிடா சீர்திருத்தத்தின் கால ஓட்டத்தில், ஷென்சென் முன்னிலையில் உள்ளது. அதன் வளர்ச்சி வரலாற்றைப் பார்த்தால், சீர்திருத்தம், திறப்பு,  அறிவியல் தொழில் நுட்பங்களின் புத்தாக்கம் ஆகியவை ஷென்சென் வளர்ச்சிக்கான உந்து சக்தியாகவும் வெற்றியின் இரகசியமாகம் உள்ளது. 
 
1979 ஆம் ஆண்டு முதல் ஷென்செனின் விரைவான வளர்ச்சியை நான்கு நிலைகளில் விளக்க முடியும் என்று 2019 இல் ஐ.நா வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. முதல் கட்டத்தில், 1978 முதல் 1992 வரை, ஷென்சென் தொழிலாளர்கள் நகரின் தீவிர வளர்ச்சிக்கு ஆதரவளித்தனர். பின்னர் தேசிய திறப்பு மற்றும் நிறுவன சீர்திருத்தங்களால் வளர்ச்சிப் பாதை வேகமெடுத்தது என  "ஷென்செனின் கதை" என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர் ஃபாக்ஸ்கான், 1988 ஆம் ஆண்டில் ஷென்செனில் தனது முதல் தொழிற்சாலையை நிறுவி, கணினி பாகங்களை உற்பத்தி செய்தது. முதல் கட்ட முதலீடு மற்றும் உற்பத்தி அனுபவத்தின் அடிப்படையில், ஷென்சென் 1992 முதல் 2003 வரை இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறியது, நகரம் உலகளாவிய மதிப்பை பெற்ற போது  தீவிர மூலதன வளர்ச்சியை மையமாகக் கொண்டு இயங்க தொடங்கியது.
 
திட்டமிட்ட பொருளாதாரத்தை மாற்றுவதற்காக சீனா சந்தைப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியதால், ஷென்சென் அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்த்தது மற்றும் படிப்படியாக மின்னணு மற்றும் தகவல் தொழில்களுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஷென்சென் உலகின் தொலைதொடர்பு சாதனங்களின் விநியோக மையமாக மாறியது. 2012 ஆம் ஆண்டில், மொத்த தொழில்துறை உற்பத்தியில் தொலைத்தொடர்பு சாதனங்கள், கணினி மற்றும் பிற மின்னணு சாதனங்களின் உற்பத்தி 56.1 சதவீதமாக இருந்தது.
 
2003 முதல் 2013 வரை ஷென்சென் தனியார் உயர் தொழில்நுட்ப வணிகத்தில் பெரும் வளர்சி கண்டு உலகளாவிய தொழில்துறை மதிப்பு சங்கிலியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. ஹூவாவெய் தொழில்நுட்ப நிறுவனம், 1987 ஆம் ஆண்டில் முதல் முறையாக ஷென்செனில் நிறுவப்பட்டது, இது உலக அளவில் விரைவான வளர்ச்சியை ஷென்ஷனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து எளிதாகக் காட்ட முடியும். 2000 ஆம் ஆண்டில், சீனாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கிடையில் ஷென்சென் 4 வது இடத்தைப் பிடித்தது, அதன் பின்னர் இது சீனாவின் முதல்நிலை நகரங்களில் ஒன்றாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
2013 க்குப் பிறகு, ஷென்சென் வெற்றிகரமாக உலக தொழில்துறை மதிப்பு சங்கிலியின் மிக உயர்ந்த இடத்தை அடைந்தது. இணைய நிறுவனமான டென்சென்ட் போன்ற பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவுடன், இந்த நகரம் ஆசியாவிற்கான தொழில்நுட்ப மையமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு, சீனாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கிடையில் ஷென்செனின் காப்புரிமைக்கான விண்ணப்பத்தின் எண்ணிக்கை நாடளவில் 6.23 சதவீதமாக உயர்ந்து முதலிடத்தில் இருந்தது.  
 
கடந்த 40 ஆண்டுகளாக சீனாவின் ஷென்சென் நகரில் பெரிய மாற்றங்கள் காணப்பட்டுள்ளன.  சிறப்பு பொருளாதார மண்டலம் நிறுவப்பட்டதிலிருந்து வேலை வாய்ப்புகள் அங்கு அதிகரித்துள்ளன. நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் 0.33 மில்லியனாக இருந்த நகரத்தின் மக்கள் தொகை  2019 ஆம் ஆண்டின் இறுதியில் 13.43 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. சீனாவின் "சிலிக்கான் வேலி" என்று அழைக்கப்படும் ஷென்சென் தற்போது நாட்டின் மிக இளம் நகரமாக விளங்குகிறது. 
 
2025 ஆம் ஆண்டளவில் நகரத்தை புதுமை, பொது சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் தலைநகரமாக மாற்றுவதற்கான தேசிய வழிகாட்டுத் திட்டத்தின் அறிமுகப்படுத்துவதன் மூலம் ஷென்சென் உலக அளவில் ஒரு முன்னணி நகரமாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்லது. குறிப்பாக தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. ஒருவருடத்திற்கு இங்கு 46,480 5 ஜி அடிப்படை நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதையடுத்து முழு அளவில் 5 ஜி தொழில்நுட்ப வசதி பெற்ற உலகின் முதல் நகரம் என்ற பெருமையை இந்நகரம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
- திருமலை சோமு

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போருக்கு ஆயத்தமாக இருங்கள்.... ராணுவத்தினருக்கு சீன அதிபர் அறிவுரை