Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனாவின் ஷென்சென் நகரை உலக மாதிரி நகராக கட்டியமைக்க திட்டம்

Advertiesment
சீனாவின் ஷென்சென் நகரை உலக மாதிரி நகராக கட்டியமைக்க திட்டம்
, திங்கள், 12 அக்டோபர் 2020 (22:42 IST)
சீனாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் ஷென்சென் நகரம் இன்று வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும்.  நாட்டின் போட்டி மிகுந்த நகரங்களில் ஒன்றாகவும் விளங்கும் ஷென்செனில் 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.  மக்கள்தொகை பெருக்கத்தின் அடிப்படையில் இந்த நகரம் உலகின் முதல் ஐந்து நகரங்களின் பட்டியலில் உள்ளது. ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெளிநாட்டு மற்றும் அரசு முதலீட்டை ஈர்ந்துள்ள நகரமாகவும் முக்கிய தொழில்துறை, நிதி மற்றும் போக்குவரத்து மையமாகவும்  மாறியுள்ளது.
 
உலக மின்னணுவியலின் இதயம் என்று அழைக்கப்படும் இந்நகரில் மனிதர்கள் பயன்படுத்தும் அனைத்து மின்னணு தொழில் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. தொலைபேசிகள், டேப்லெட்டுகள், கைக்கடிகாரங்கள், பொம்மைகள், ரோபோக்கள் என அனைத்து இங்கு இருந்து ஏற்றுமதியாகின்றன. இந்நிலையில் ஷென்செனை, மாதிரி சோசலிச நகரமாக கட்டியமைக்கும் திட்டத்தை சீனா தற்போது வெளியிட்டுள்ளது. 
 
சீனா, சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்கு ஆதரவளித்த 40 ஆண்டுகளில், ஷென்சென் செழித்து, தேசிய சீர்திருத்தத்தின் பதாகையாக மாறியுள்ளது. புதிய திட்டத்தின் கீழ், வணிகச் சூழல்  மற்றும் நகர்ப்புற இடங்களின் ஒட்டுமொத்த பயன்பாட்டை மேம்படுத்துவது உள்ளிட்ட பல பெரிய சீர்திருத்த நடவடிக்கைகள் 2020 இல் தொடங்கப்பட்டுள்ளன. பைலட் திட்டத்திற்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்க விரிவான அங்கீகார பட்டியல்களின் முதல் தொகுதி வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டில், அமைப்புமுறை கட்டுமானத்தின் அனைத்து அம்சங்களிலும் முக்கியமான முன்னேற்றங்கள் கொண்டுவரப்படும். 
 
2025 ஆம் ஆண்டளவில், முக்கிய பகுதிகளில் ஏற்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் மைல்கல் முடிவுகளை அடைந்து தேசிய அமைப்பை நிர்மாணிக்க ஒரு முக்கியமான முன்மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட்-19 தொற்றுநோய் பரவிய சூழலில் டிஜிட்டல் சீனா உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த டிஜிட்டல் முன்னேற்றங்கள் நடைமுறையாக்கத்துக்கு வந்தன.. எடுத்துக்காட்டாக, பல வணிக நிறுவனங்களும் ஊழியர்களும் காணொலிக் கூட்டங்களை ஏற்றுக்கொண்டனர் மற்றும் பல கணக்குகளால் இது வணிக நடைமுறைகள் மற்றும் பணியாளர் விருப்பங்களில் நிரந்தர மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 
 
தற்போது, ஷென்ச்சென் நகரின் சுங்கசாவடியில், ஒரு பொதியினை ஒழுங்கு முறை செய்ய 22 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நாள்தோறும் இந்நகரில் நெடுநோக்கு ரீதியில் 100க்கும் மேலான புதிய தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இதுவரை, உலகில் உள்ள 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் சுமார் 300 தொழில் நிறுவனங்கள் ஷென்ச்சென் நகரில் முதலீடு செய்துள்ளன. இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜுலை திங்கள் வரையிலான காலத்தில், இந்நகரம் பயன்படுத்திய அன்னிய முதலீட்டுத் தொகை சுமார் 490 கோடி அமெரிக்க டாலராகும். இக்கடினமான காலத்திலும் கூட 12.8 விழுக்காடு அதிகரிப்பு நனவாக்கப்பட்டுள்ளது.
 
மேலும், கோவிட்-19 மற்றும் புவிசார் அரசியல் சூழலில் ஏற்பட்ட பிற மாற்றங்கள் காரணமாக, சீனா "இரட்டை சுழற்சி"க்கு முன்னுரிமை அளித்துள்ளது. உள்நாட்டு சந்தையை வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், உற்பத்தி மற்றும் விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை மேலும் மேம்படுத்துவதன் மூலமும், இந்த மூன்று செயல்பாடுகளை இன்னும் இறுக்கமாக ஒருங்கிணைப்பதன் மூலமும், இந்த நோக்கங்களை ஒரு யதார்த்தமாக்குவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கை சீனா அங்கீகரித்துள்ளது.
 
ஐந்தாண்டுத் திட்டம் சட்ட, நிதி, மருத்துவ மற்றும் சமூகத் துறைகளில் விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டது. சந்தை சார்ந்த மூலதன சந்தையை உருவாக்குவதிலும், டிஜிட்டல் நாணய பைலட் சோதனையை அதிகரிப்பதிலும் சீனா உயர் தொழில்நுட்ப மையத்தை ஆதரிக்கிறது. ஷென்ஷனின் ”சினெக்ஸ்ட் போர்டு” ஜூன் மாதத்தில் பட்டியல் செயல்முறையை நெறிப்படுத்தியது, இது ஐபிஓ விலையை முழுமையாக தீர்மானிக்க சந்தைக்கு அனுமதியளித்தது.
 
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் ஷென்சென் நகரில் சீன தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச முன்மாதிரி மண்டலத்தை கட்டியமைப்பதற்குரிய முக்கியத் தீர்மானத்தை சீனா முன்னெடுத்தது. அந்த ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட 2.7 டிரில்லியன் யுவானாக இருந்தது. 21ஆம் நூற்றாண்டின் நடுவில் இந்நகர் போட்டியாற்றல், புத்தாக்கம், செல்வாக்கு ஆகியவற்றைக் கொண்ட தலைசிறந்த உலக மாதிரி நகரமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சவாலுக்கே சவால் விட்ட அதிமுக நிர்வாகி கரூரில் பரபரப்பு அரசியல் ?