Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணத்துடன் தப்பி ஓடிய அதிபர் !

பணத்துடன் தப்பி ஓடிய அதிபர் !
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (18:34 IST)
ஆப்கானிஸ்தான்  அதிபர் அஷ்ரப் கானி நாட்டைவிட்டு பணத்தால் நிரப்பட்ட, ஹெலிகாப்படர், காருடன் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தலீபான்கள் கை உயர தொடங்கியது. ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய தலீபான்கள் நேற்று தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். அதை தொடர்ந்து ஆட்சியை விடுத்து தலைமறைவாகியுள்ளார் அந்நாட்டு அதிபர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வாழும் பிறநாட்டு மக்களை திரும்ப வரும்படி அந்தந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்காக சிறப்பு விமானங்களை உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் அனுப்ப தொடங்கியுள்ளன. இதனால் வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிர கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கும்பல் கும்பலாக இரவிலிருந்து தங்கள் நாட்டு விமானங்களுக்காக காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

 
மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை மாற்றியுள்ளது தலீபான்கள் அமைப்பு. இனி ஆப்கானிஸ்தான் என்பதற்கு பதிலாக இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று அழைக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தலீபான்கள் ஆட்சிக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஆப்கானிஷ்தான் அதிபர் அஷ்ரப் கானி அந்நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றதாக ரஷ்யா கூறியுள்ளது.

இதுகுறித்து காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் கூறியுள்ளதாவது: ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பணத்தால் நிரப்பப்பட்ட 4 கார்களுடன் தனது நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும்,  மேலும், ஹாலிகாப்டரில் நிரப்ப முடியாத பணம் அவரது வீட்டில் அப்படியே விட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பொறுப்பேற்றவுடன் வாகை சந்திரசேகரின் முதல் அறிவிப்பு!