Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலருடன் ரகசிய திருமணம்?? நயன்தாரா தகவல்

Advertiesment
Nayantara Info
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:23 IST)
நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடனான திருமணம் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நயன்தாரா.

இப்படத்திற்குப் பின், சந்திரமுகி, கஜினி, வில்லு, பில்லா, தர்பார், உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். அறம், டோரா, கோலமாவு கோகிலா உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். எனவே நயன் தாரா நடித்துள்ள நெற்றிக்கண் பட விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்தம் முடிந்துவிட்டதாக கூறும் வீடியோ வைரலானது. மேலும், திருமணம் குறித்த  கேள்வியை டிடி  எழுப்பினார். இதற்குப் பதிலளித்த நயன் தாரா, எல்லோரிடமும் கூறிவிட்டு திருமணம் செய்ய மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹரி படத்தின் படப்பிடிப்பில் காயமான அருண் விஜய்!