Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசித் தாக்குதல் நடத்திய போலீஸார்

Srilanka
, புதன், 8 மார்ச் 2023 (23:14 IST)
இலங்கையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது, ஜனாதிபதியாக ரனில் விக்ரமசிங்கே பதவிவகித்து வருகிறார்.

இலங்கையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொழும்பு பல்கலைக்கழகம் அருகே மாணவர்கள் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களைக் கலைக்க வேண்டி, போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி மாணவர்களை விரட்டினர். பின்னர், பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில், பாதிக்கப்பட்ட சில மாணவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் அதனால், தாக்குதலை நிறுத்த வேண்டுமென்று  போலீஸாரிடம் ஆசிரிய்ர்கள், நிர்வாகிகள் கேட்டனர். இதையடுத்து, போலீஸார் மன்னிப்புக் கோரிவிட்டு, அங்கிருந்து சென்றனர்.

பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரின் செயலுக்கு பேராசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது   நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கல்லூரிப் பேராசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'விடுதலை' படத்தின் இசை  மற்றும் டிரைலர் மார்ச்ட் 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அம்பானீஸ் இன்று இந்தியா வருகை