Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொதுமக்கள், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்- டிடிவி. தினகரன்

Advertiesment
பொதுமக்கள், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்- டிடிவி. தினகரன்
, திங்கள், 6 மார்ச் 2023 (17:15 IST)
போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க அரசு திட்டமிடுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் காட்டியுள்ள நிலையில், இதற்கு, அமமுக தலைவர் தினகரன் பொதுமக்கள்,போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் அமமுக பொதுச்செயலாளர்  தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக சாதக பாதகங்களை ஆராய  டெண்டர் விடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க தி.மு.க. அரசு திட்டமிடுவதாக  ஆளுங்கட்சி தொழிற்சங்கமே குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களுக்கு குறைந்த செலவில் பொதுப்போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கதக்கதல்ல. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இருதரப்பையும் பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

போக்குவரத்துறையில் புரையோடியிருக்கும் முறைகேடுகளை களையெடுத்து லாபநோக்கில்  போக்குவரத்துறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணீஸ் சிசோடியாவுக்கு மார்ச் 20 ஆம் தேதி வரை சிறை- நீதிமன்றம் உத்தரவு