Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாலத்தீவு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சரிவு..! சீனர்களின் வருகை அதிகரிப்பு..!!

Advertiesment
Maldives

Senthil Velan

, சனி, 20 ஏப்ரல் 2024 (16:32 IST)
இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது. 
 
மாலத்தீவின் சுற்றுலா அமைச்சகம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த மாதாந்திர அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தரவு காட்டுகிறது.
 
ஜனவரி மற்றும் மார்ச் 2023 க்கு இடையில் 56,208 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுகளுக்குச் சென்றுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி-மார்ச் 2024 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 34,847 ஆகக் குறைந்துள்ளது. இது 2023ஆம் ஆண்டை விட 38 சதவீதம் சரிவாகும்.
 
இதற்கிடையில், ஜனவரி-மார்ச் 2023-ல் சீனாவில் இருந்து 17,691 சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுகளுக்குச் சென்றுள்ளனர். ஜனவரி-மார்ச் 2024-ல் எண்ணிக்கை 67,399 ஆக உயர்ந்தது.  இது 281 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்தது.

சமீபத்திய தரவுகளின்படி, மாலத்தீவு சுற்றுலாவின் முதல் 10 சந்தைகளில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது, அதே நேரத்தில் சீனா 11 சதவீத பங்கைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.

லட்சத்தீவை சர்வதேச அளவிலான சுற்றுலா மையமாக மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலுக்குப் பின் இந்தியா கூட்டணி இருக்காது.! ராகுல் காந்தி தோல்வி அடைவார்..! பிரதமர் மோடி..!!