Publish Date: Sat, 20 Apr 2024 (13:23 IST)
Updated Date: Sat, 20 Apr 2024 (13:26 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே உள்ளது என்பதும் நேற்று 55 ஆயிரத்து தாண்டியது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தங்கம் விலை தற்போது சற்று குறைந்து இருந்தாலும் இன்னும் 55 ஆயிரத்துக்கு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 6,885 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து ரூபாய் 55,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,355 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,840 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது