Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணுசக்தி திட்டத்தை நிறுத்த முடியாது! அமெரிக்கா வேணும்னா பேச்சுவார்த்தை நடத்தட்டும்! - ஈரான் கறார்!

Advertiesment
US Iran conflict

Prasanth K

, புதன், 23 ஜூலை 2025 (09:41 IST)

ஈரான் அணுசக்தி ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், தங்கள் அணுசக்தி திட்டத்தை நிறுத்த முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது.

 

ஈரான் அணுசக்தி ஆய்வுகளில் சமீப காலமாக ஈடுபட்டு வந்த நிலையில், அதை அமெரிக்கா கடுமையாக கண்டித்தது. ஈரான் அணுசக்தி சோதனைகளில் ஈடுபடுவதை எதிர்த்து அமெரிக்க ராணுவத்தின் விமானங்கள் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின. மேலும் ஈரான் மீண்டும் அணுசக்தி ஆய்வுகளில் ஈடுபட்டால் மறுபடியும் தாக்குவோம் என அமெரிக்கா எச்சரித்தது.

 

இந்நிலையில் ஈரான் வெளியுறவு மந்திரி அபாஸ் அரக்சி பேசியபோது, “அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் அணுசக்தி திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுள்ளது. ஆனால் அணுசக்தி செறிவூட்டலை நாங்கள் கைவிடமாட்டோம். இது எங்கள் சொந்த விஞ்ஞானிகளின் சாதனை மட்டுமல்லாமல் எங்கள் தேசத்தின் பெருமைக்குரிய விஷயம்.

 

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால் அது நேரடி பேச்சுவார்த்தையாக இருக்காது. எங்கள் அணுசக்தி திட்டத்திற்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயல்வோம். ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது. ஈரான் ஒருபோது அணு ஆயுதங்களை தயாரிக்காது. ஆனால் அதற்கு ஈடாக அமெரிக்கா தங்கள் தடையை நீக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு 100% வரி.. பொருளாதாரத்தை நசுக்குவோம்! - அமெரிக்கா எச்சரிக்கை!