Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிகக்குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை : மருத்துவ உலகின் ஆச்சரியம் !

மிகக்குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை : மருத்துவ உலகின் ஆச்சரியம் !
, வெள்ளி, 31 மே 2019 (15:55 IST)
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்திலுள்ள சானியாகோ நகரில் ஷார்ப் மேரி பிர்ச் என்ற மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு பெண் அனுமதிக்கப்பட்டார்.
அப்பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.அத்துடன் அவரது வயிற்றில் உள்ள 23 வாரங்களே ஆன குழந்தையை, அறுவை சிகிச்சை செய்து உடனடியாக வெளியே எடுத்தால் மட்டும்தான் அப்பெண் பிழைக்க முடியும் என்ற மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
பின்னர் உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
 
வெறும் 23 வாரங்களே ஆன அக்குழந்தை 245 கிராம் எடையுடன் தான் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். மேலும் இக்குழந்தை பிறந்தால்  ஒருமணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்குமென்று தெரிவித்த நிலையில் தீவிரமான மருத்துவர் சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்ட குழந்தை தற்பொழுது 2.2. கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
 
இக்குழந்தையின் பெயர் 'சேபீ' என்று அழைத்துவருகின்றனர்.அதாவது உலகின் மிகக்குறைவான் எடையுடன் பிறந்த குழந்தை சேபீ தான் என்று அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவர் டார்ச்சர் செய்த மனைவி.. துப்பாக்கியால் சுட்ட கணவன்