Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடையை குறைக்கும் கொள்ளு!

Advertiesment
ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடையை குறைக்கும் கொள்ளு!
, ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (09:27 IST)
உடல் எடையைக் எளிதாகவும்,  எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கை முறையில் குரைக்க கொள்ளு பருப்பு உகந்தவை. அதன் அற்புத பயன்களையும் எப்படி உட்கொள்ளவேண்டும் என்பதையும் இங்கே காணலாம்.


 
1) கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச்சதை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
 
2) கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.
 
3) தினமும் கொள்ளினை உணவில் சேர்த்து வருபவர்களின் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும்.
 
4) கொள்ளு பருப்பை வறுத்து பொடி செய்துகொண்டு, ஒரு டம்பளர் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் ஒரு டீஸ்பூன் கொள்ளு பவுடர் மற்றும் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்கவைத்து மறுநாள் காலை பருகி வர ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைவதை உணரமுடியும்.
 
‘இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் கொள்ளுவில் அதிக சக்தி உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரெட் குலாப் ஜாமுன் எப்படி செய்வது...?