தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், மனைவி கிம் ஜங் சூக்குடன் நேற்று வடகொரியாவில் உள்ள பியாங்யாங் நகருக்கு 3 நாள் பயணமாக சென்றார். அங்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.பின் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இரு தலைவர்களும் இன்று கூட்டாக அறிக்கை வெளியிட்டு நிருபர்களை சந்தித்தனர். அதன்பின் தென் கொரிய அதிபர் மூன் ஜே அறிவித்ததாவது:
”வடகொரியா தங்கள் வசம் உள்ள ஏவுகணை எஞ்சின் சோதனை தளம் மற்றும் ஏவுதளம் போன்றவற்றை நிரந்தரமாக அழிக்க வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. உறுதியான நடவடிக்கைகளோடு அமெரிக்கா வரும் பட்சத்தில் நியோங்பியோனில் உள்ள முக்கியமான அணு உலை கூடத்தை அழிக்க தயாராக உள்ளதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.